நாகை, வேதாரண்யம் நகராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது

நாகை, வேதாரண்யம் நகராட்சிகளை தி.மு.க கைப்பற்றி உள்ளது.
வெளிப்பாளையம்:
நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம் என 2 நகராட்சிகள், திட்டச்சேரி, வேளாங்கண்ணி, கீழ்வேளூர், தலைஞாயிறு என 4 பேரூராட்சிகளுக்கும் கடந்த 19-ந்தேதி தேர்தல் நடைபெற்று, நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. நாகை நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இதில் 16-வது வார்டில் போட்டியின்றி சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து மீதமுள்ள 35 வார்டுகளுக்கும், வேதாரண்யம் நகராட்சியில் 21 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
வேதாரண்யம் நகராட்சியில் 18 வார்டுகளில் தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 1 வார்டிலும், அ.தி.மு.க. 1 வார்டிலும், சுயேச்சை 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன. நாகை நகராட்சியில் தி.மு.க. 27 வார்டுகளிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 1 வார்டிலும், அ.தி.மு.க. 5 வார்டிலும், சுயேச்சை 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
Related Tags :
Next Story






