தர்மபுரி மாவட்டத்தில் பேரூராட்சி தேர்தல் குறைந்த வாக்கு பெற்ற வேட்பாளர்கள் 3 பேர் ஒரு வாக்கு கூட பெறவில்லை
தர்மபுரி மாவட்டத்தில் நடந்த பேரூராட்சி தேர்தலில் வேட்பாளர்கள் குறைந்த வாக்கு பெற்றுள்ளனர். 3 வேட்பாளர்கள் ஒரு வாக்கு கூட பெறவில்லை.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நடந்த பேரூராட்சி தேர்தலில் வேட்பாளர்கள் குறைந்த வாக்கு பெற்றுள்ளனர். 3 வேட்பாளர்கள் ஒரு வாக்கு கூட பெறவில்லை.
பேரூராட்சி தேர்தல்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சிகளில் நடந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சில அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மிகக்குறைந்த வாக்குகளை பெற்று உள்ளனர். பென்னாகரம் பேரூராட்சி 13-வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் மாரி செட்டி 1 வாக்கும், காரிமங்கலம் பேரூராட்சி 5-வது வார்டு வேட்பாளர் கார்த்திகா, 14-வது வார்டு வேட்பாளர் நவீன்குமார் ஆகியோர் தலா 1 வாக்கு பெற்றுள்ளனர்.
அரூர் பேரூராட்சி 5-வது வார்டு சுயேச்சை வேட்பாளர் சேட்டு, பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி 6-வது வார்டு பா.ம.க. வேட்பாளர் ரோஷினி, கடத்தூர் பேரூராட்சி 8-வது வார்டு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரசாந்த் ஆகியோர் தலா 1 வாக்கு பெற்றுள்ளனர்.
பா.ம.க.- பா.ஜனதா
மாரண்டஅள்ளி பேரூராட்சி 5-வது வார்டு வேட்பாளர் பாலகிருஷ்ணன், 8-வது வார்டு பா.ம.க. வேட்பாளர் மல்லிகா, 9-வது வார்டு சுயேச்சை வேட்பாளர் நசீர், 11-வது வார்டு பா.ஜனதா வேட்பாளர் முருகன் ஆகியோர் தலா 1 வாக்கு பெற்றுள்ளனர்.
1 வாக்கு கூட பெறாத வேட்பாளர்கள்
இதேபோல் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி 3-வது வார்டு பா.ம.க. வேட்பாளர் சதாசிவம், கடத்தூர் பேரூராட்சி 8-வது வார்டு சுயேச்சை வேட்பாளர் ராமகிருஷ்ணன், மாரண்டஅள்ளி பேரூராட்சி 4-வது வார்டு சுயேச்சை வேட்பாளர் சண்முகம் ஆகியோர் 1 வாக்கு கூட பெறவில்லை.
Related Tags :
Next Story