திமுக 130 வார்டுகளில் வெற்றி
விழுப்புரம் மாவட்டத்தில் திமுக 130 வார்டுகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 33 இடங்களை கைப்பற்றியது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகளின் 102 நகரமன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 7 பேரூராட்சிகளின் 108 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் என மொத்தம் 210 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.
இதில் தி.மு.க. 130 இடங்களிலும், அ.தி.மு.க. 33 இடங்களிலும் வெற்றி வாகை சூடியுள்ளது. மற்ற கட்சிகளான பா.ம.க. 6 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒரு இடத்திலும், தே.மு.தி.க. ஒரு இடத்திலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இதுதவிர சுயேச்சையாக போட்டியிட்ட வேட்பாளர்கள் 31 பேர் வெற்றியை ருசித்துள்ளனர்.
Related Tags :
Next Story