குமாரபாளையம் நகராட்சியில் வெற்றி பெற்ற தாய்- மகன், அக்காள்- தங்கை
குமாரபாளையம் நகராட்சியில் வெற்றி பெற்ற தாய்- மகன், அக்காள்- தங்கை
குமாரபாளையம்:
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் 4-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட புஷ்பா வெற்றி பெற்றார். 2-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணவேணி வெற்றி பெற்றார். இவர்கள் 2 பேரும் அக்காள்- தங்கை ஆவர்
இதேபோல் 29-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தனலட்சுமியும், 30-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாலசுப்பிரமணியனும் தாய், மகன் ஆவர்.
Related Tags :
Next Story