திருச்செங்கோடு நகராட்சி 13-வது வார்டில் குலுக்கல் முறையில் வென்ற சுயேச்சை வேட்பாளர்
திருச்செங்கோடு நகராட்சி 13-வது வார்டில் குலுக்கல் முறையில் வென்ற சுயேச்சை வேட்பாளர்
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் 13-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ரேவதி சங்கர் 696 வாக்குகளும், சுயேச்சையாக போட்டியிட்ட சினேகா ஹரிகரன் 696 வாக்குகளையும் பெற்றனர். இருவரும் சம வாக்குகள் பெற்றதால் யார் வெற்றி என்பதை கண்டறிய குலுக்கல் முறை பின்பற்ற முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளரும், தேர்தல் அலுவலருமான கணேசன் 2 வேட்பாளர்களையும் அழைத்து குலுக்கல் முறையில் தேர்வு செய்யலாமா என கேட்டார். அதற்கு இருவரும் சரி என்று கூறினர்.
பின்னர் குலுக்கல் முறையில் 2 வேட்பாளர்களின் பெயர்களை எழுதி குலுக்க முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தேர்தல் அலுவலர் ஒரு பெண்ணை குலுக்கல் சீட்டு எடுக்கும்படி கூறியதன்பேரில் அந்த பெண் ஒரு குலுக்கல் சீட்டை எடுத்து கொடுத்தார். அதில் சினேகா அரிகரன் பெயர் வந்ததையடுத்து அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றியை நழுவ விட்ட வேட்பாளருக்கு தி.மு.க.வினர் ஆறுதல் கூறினர்.
Related Tags :
Next Story