பாண்டமங்கலம் பேரூராட்சி 3-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

பாண்டமங்கலம் பேரூராட்சி 3-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
x
தினத்தந்தி 23 Feb 2022 1:10 AM IST (Updated: 23 Feb 2022 1:10 AM IST)
t-max-icont-min-icon

பாண்டமங்கலம் பேரூராட்சி 3-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் பேரூராட்சியில் 3-வது வார்டு பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இந்த வார்டில் மொத்தம் 456 வாக்குகள் உள்ளன. இதில் 390 வாக்குகள் பதிவாகின. அ.தி.மு.க.வை சேர்ந்த செல்வி 190 வாக்குகளும், தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பாப்பாத்தி 189 வாக்குகளும் பெற்றனர். எனவே ஒரு வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் செல்வி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வார்டில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட ராதிகா 11 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1 More update

Next Story