திம்பம் மலைப்பாதையில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்
திம்பம் மலைப்பாதையில் காய்கறி வேன் கவிழ்ந்ததில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திக்கு நேற்று இரவு காய்கறி ஏற்றி சென்ற மினி வேன் ஒன்று வந்து கொண்டு இருந்தது. இந்த வேன் இரவு 9 மணிஅளவில் திம்பம் மலைப்பாதை 11-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் மகேசா காயமின்றி உயிர் தப்பினார். சாலை ஒரத்தில் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. பின்னர் பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு நள்ளிரவு 2 மணிஅளவில் மினி வேன் மீட்கப்பட்டது இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story