மறுவாக்குப்பதிவு நடந்த வார்டில் அ.தி.மு.க. பெண் வேட்பாளர் வெற்றி


மறுவாக்குப்பதிவு நடந்த வார்டில்  அ.தி.மு.க. பெண் வேட்பாளர் வெற்றி
x
தினத்தந்தி 23 Feb 2022 2:05 AM IST (Updated: 23 Feb 2022 2:05 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம் நகராட்சியில் மறுவாக்குப்பதிவு நடந்த வார்டில் அ.தி.மு.க. பெண் வேட்பாளர் வெற்றி பெற்றார். மற்றொரு வார்டில் அவருடைய கணவர் ேதால்வி அடைந்தார்.

திருமங்கலம்,

திருமங்கலம் நகராட்சியில் மறுவாக்குப்பதிவு நடந்த வார்டில் அ.தி.மு.க. பெண் வேட்பாளர் வெற்றி பெற்றார். மற்றொரு வார்டில் அவருடைய கணவர் ேதால்வி அடைந்தார்.

மறுதேர்தல் நடந்த வார்டு

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி 17-வது வார்டு தேர்தலில், 150-க்கும் மேற்பட்டவர்கள் படிவத்தில் கையெழுத்திடாமல்  ஓட்டுப்போட்டதாக சர்ச்சை ஏற்பட்டது. இதைதொடர்ந்து நேற்று முன்தினம் அந்த வார்டில் மறுதேர்தல் நடந்தது.
நேற்று மற்ற வார்டுகளுடன் சேர்த்து, 17-வது வார்டு தேர்தலுக்கான வாக்குகளும் எண்ணப்பட்டன. இதில் அ.தி.மு.க. வேட்பாளர் உமா 770 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ராஜம்மாள் 496 வாக்குகள் பெற்று இருந்தார். 
வெற்றி பெற்ற உமா, கடந்த முறை திருமங்கலம் நகராட்சியில் தலைவராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கணவர் தோல்வி

உமாவின் கணவர் விஜயன் திருமங்கலம் நகராட்சியில் 1-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு 21 வாக்குகள் வித்தியாசத்தில் ேதால்வியை தழுவினார். அவர் 866 ஓட்டுகள் பெற்று இருந்தார். அந்த வார்டில் தி.மு.க. சார்பில் காசிபாண்டி 887 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story