திருச்சி மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது

திருச்சி, பிப்.23-
திருச்சி மாநகராட்சி தேர்தலில் 65 வார்டுகளில் 59 வார்டுகளை தி.மு.க.-காங் கூட்டணி கைப்பற்றியது. இதன்மூலம் திருச்சி மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது. அ.தி.மு.க.-3, சுயேச்சை-2, அ.ம.மு.க.-1 வார்டுகளில் வெற்றி பெற்றது.
மாநகராட்சி தேர்தல்
திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளுக்கும் கடந்த 19-ந் தேதி தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் தி.மு.க.-51, காங்கிரஸ்-5, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 2 இடங்கள், மனிதநேய மக்கள் கட்சி-1 இடத்திலும் போட்டியிட்டது.
அ.தி.மு.க. 64 வார்டுகளில், த.மா.கா. ஒரு வார்டிலும் போட்டியிட்டது. பாரதீய ஜனதா கட்சி 61 வார்டிலும் போட்டியிட்டது. மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., சுயேச்சைகள் என மொத்தம் 589 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம் திருச்சி மாநகராட்சியில் 4 லட்சத்து 45 ஆயிரத்து 257 வாக்குகள் பதிவாகி இருந்தது. பதிவான ஓட்டு சதவீதம் 57.25 ஆகும். ஓட்டுகள் பதிவான மின்னணு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு அறைகளில் வைத்து சீலிடப்பட்டு இருந்தன.
தபால் வாக்குகள்
திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளுக்கான வாக்கு எண்ணுக்கை, வாக்கு எண்ணும் மையமான திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் கோட்டம் வாரியாக 4 இடங்களில் நடந்தது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான எஸ்.சிவராசு முன்னிலையில் எண்ணப்பட்டன. அதைத்தொடர்ந்து 8.30 மணிக்கு வார்டு வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
திருச்சி மாநகராட்சியில் உள்ள 4 கோட்டத்திற்கும், கோட்டத்திற்கு 2 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வீதம் 8 பேர் முன்னிலையில் ஒரே நேரத்தில் 8 வார்டுகளின் வாக்குகள் 2 சுற்றுகளாக எண்ணப்பட்டு உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்களும், ஓட்டு எண்ணுவது முழுமையாக பதிவும் செய்யப்பட்டது. அத்துடன் டிரோன் கேமரா மூலமும் வாக்கு எண்ணும் மையம் கண்காணிக்கப்பட்டது.
தி.மு.க.-காங். கூட்டணி அமோக வெற்றி
இடைவிடாது ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று மாலை 4.30 மணியுடன் முடிவடைந்தது. முடிவில் 65 வார்டுகளில் போட்டியிட்டு தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி 59 வார்டுகளில் அமோக வெற்றி பெற்றது.
அதன்படி, தி, மு.க. மட்டும் 49 வார்டுகளில் வெற்றிக்கனியை பறித்தது. இதுபோல காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட்ட 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். மேலும் தி.மு.க. கூட்டணியான ம.தி.மு.க. 30-வது வார்டிலும், 5-வது வார்டிலும், இந்திய கம்யூனிஸ்டு 23-வது வார்டிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 17-வது வார்டிலும் வெற்றி பெற்றன.
அ.தி.மு.க.-3, சுயேச்சை 2 வார்டில் வெற்றி
65 வார்டுகளில் தனித்து போட்டியிட்ட அ.தி.மு.க. 14-வது, 37 மற்றும் 65-வது வார்டு ஆகிய 3 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதர இடங்களில் 2 மற்றும் 3 இடங்களை பிடித்து படுதோல்வி அடைந்தது. சுயேச்சையாக போட்டியிட்ட வேட்பாளர்கள் 20, 59 ஆகிய 2 வார்டுகளில் வெற்றி பெற்றனர். இதுபோல 54 வார்டுகளில் தனித்து போட்டியிட்ட அ.ம.மு.க. வேட்பாளர்களில் 47-வது வார்டில் போட்டியிட்டவர் மட்டுமே வெற்றி பெற்றார்.
மாநகராட்சியை கைப்பற்றிய தி.மு.க.
திருச்சி மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் போட்டியிட்ட தி.மு.க.49 வார்டுகளில் வென்று தனிப்பெரும்பான்மையாக வெற்றி பெற்றதன் மூலம் திருச்சி மாநகராட்சியை தனதாக்கி கொண்டது. இதன்மூலம் திருச்சி மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவியையும் தி.மு.க.வே ருசிக்க உள்ளதாக அக்கட்சியினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுதவிர 4 கோட்டங்களிலும் தி.மு.க.வினரே தலைவராகும் வாய்ப்பு கிட்டியுள்ளது. அவற்றில் கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு வேண்டுமானால் ஏதாவது கோட்டத்தலைவர் கொடுப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
அ.தி.மு.க.வின் அதிகாரம் பறிபோனது
கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த மாநகராட்சி தேர்தலின் போது 65 வார்டுகளில் 42 வார்டுகளை அ.தி.மு.க. கைப்பற்றி மேயர் பதவியையும் கைப்பற்றியது. அ.தி.மு.க.வை சேர்ந்த ஜெயா மேயராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்த தேர்தலில் தி.மு.க. 17 வார்டுகளில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. ம.தி.மு.க.-2, காங்கிரஸ், தே.மு.தி.க. தலா ஒரு வார்டிலும், 2 சுயேச்சைகளும் வெற்றி பெற்றிருந்தனர். தற்போதைய உள்ளாட்சி தேர்தலின் மூலம் அ.தி.மு.க. தனது அதிகார பலத்தை இழந்து படுதோல்வியை சந்தித்துள்ளது அக்கட்சியினரினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Related Tags :
Next Story