பேரூராட்சிகளில் அதிக வார்டுகளை தி.மு.க. கைப்பற்றியது


பேரூராட்சிகளில் அதிக வார்டுகளை தி.மு.க. கைப்பற்றியது
x
தினத்தந்தி 23 Feb 2022 2:52 AM IST (Updated: 23 Feb 2022 2:52 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பேரூராட்சிகளில் அதிக வார்டுகளை தி.மு.க. கைப்பற்றியது.

திருச்சி,பிப்.23-
திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பேரூராட்சிகளில் அதிக வார்டுகளை தி.மு.க. கைப்பற்றியது.
14 பேரூராட்சிகள்
திருச்சி மாவட்டத்தில் 14 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 13 பேரூராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது. அதன் விவரம் வருமாறு:-
பொன்னம்பட்டி பேரூராட்சி
திருச்சி மாவட்டம் பொன்னம்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் சுயேச்சை 6 வார்டுகளிலும், தி.மு.க. 4 வார்டுகளிலும், அ.தி.மு.க. 2 வார்டுகளிலும், வி.சி.க., மனிதநேய மக்கள் கட்சி, தே.மு.தி.க. தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
சிறுகமணி
சிறுகமணி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 8 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 4 வார்டுகளிலும், அ.தி.மு.க. 2 வார்டுகளிலும் வென்றுள்ளன.
தா.பேட்டை
தா.பேட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 11 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, சுயேச்சை தலா ஒரு வார்டுகளிலும், அ.தி.மு.க. 2 வார்டுகளிலும் வென்றுள்ளன.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையத்தில் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 13 வார்டுகளிலும், அ.தி.மு.க., சுயேச்சை தலா ஒரு இடங்களிலும் வென்றுள்ளனர்.
கூத்தைப்பார்
கூத்தைப்பார் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 14 வார்டுகளிலும், காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலா ஒரு இடங்களிலும் வென்றுள்ளன.
தொட்டியம்
தொட்டியம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 10 வார்டுகளிலும்,  அ.தி.மு.க. 3 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, சுயேச்சை தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
பூவாளூர்
பூவாளூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 7 வார்டுகளிலும், அ.தி.மு.க. 5 வார்டுகளிலும், சுயேச்சை 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
புள்ளம்பாடி
புள்ளம்பாடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 8 வார்டுகளிலும், அ.தி.மு.க. 4 வார்டுகளிலும், சுயேச்சை 3 வார்டுகளிலும் வென்றுள்ளன.
கல்லக்குடி
கல்லக்குடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 8 வார்டுகளிலும், சுயேச்சை 3 வார்டுகளிலும், அ.ம.மு.க.2 வார்டுகளிலும், வி.சி.க., அ.தி.மு.க. தலா ஒரு வார்டுகளிலும் வென்றுள்ளன.
உப்பிலியபுரம்
உப்பிலியபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 8 வார்டுகளிலும், அ.தி.மு.க. 6 வார்டுகளிலும், சுயேச்சை ஒரு வார்டிலும் வென்றுள்ளன.
பாலகிருஷ்ணம்பட்டி
பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 10 வார்டுகளிலும், அ.தி.மு.க. 4 வார்டுகளிலும், ஐ.ஜே.கே. ஒரு வார்டிலும் வென்றுள்ளனர்.
மண்ணச்சநல்லூர்
மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. தி.மு.க. 16 வார்டுகளிலும், ம.தி.மு.க., காங்கிரஸ் தலா ஒரு இடங்களிலும் வென்றுள்ளன.
ச.கண்ணனூர்
ச.கண்ணனூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 10 வார்டுகளிலும், சுயேச்சை 2 வார்டுகளிலும், அ.தி.மு.க. 2 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒரு வார்டிலும் வென்றுள்ளன.
காட்டுப்புத்தூர்
காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில்  தி.மு.க. 9 வார்டுகளிலும், அ.தி.மு.க.2 வார்டுகளிலும், சுயேச்சை 2 வார்டுகளிலும், வி.சி.க., காங்கிரஸ் தலா ஒரு இடங்களிலும் வென்றுள்ளன.
பெரம்பலூர் மாவட்டம்
ெபரம்பலூர் மாவட்டத்தில் 4 பேரூராட்சிகள் உள்ளன. இதில் பூலாம்பாடி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. 12 வார்டுகளிலும், அ.தி.மு.க. 2 வார்டுகளிலும், சுயேச்சை 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன. அரும்பாவூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. 8 வார்டுகளிலும், அ.தி.மு.க. 6 வார்டுகளிலும், சுயேச்சை 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன. குரும்பலூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. 11 வார்டுகளிலும், அ.தி.மு.க. 1 வார்டிலும், சுயேச்சைகள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. லெப்பைக்குடிகாடு பேரூராட்சியில் 15 வார்டுகளில் தி.மு.க. 8 வார்டுகளிலும், அதன் கூட்டணி கட்சிகளான மனிதநேய மக்கள் கட்சி 3 வார்டுகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2 வார்டுகளிலும், ம.தி.மு.க. 1 வார்டிலும், சுயேச்சை 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன.
அரியலூர் மாவட்டம்
அரியலூர் மாவட்டத்தில் 2 பேரூராட்சிகள் உள்ளன. இதில் உடையார்பாளையம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. 7 வார்டிலும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா 1 வார்டிலும் மற்றும் அ.தி.மு.க. 1 வார்டிலும், பா.ஜ.க. 1 வார்டிலும், பா.ம.க. 1 வார்டிலும், சுயேச்சைகள் 3 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன. வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர்கள் 7 வார்டுகளிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 8 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
கரூர் மாவட்டம்
கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, புலியூர், உப்பிடமங்கலம், கிருஷ்ணராயபுரம், மருதூர், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம், புஞ்சை தோட்டக்குறிச்சியில் தலா 15 வார்டுகளும், நங்கவரம் பேரூராட்சியில் 18 வார்டுகளும் உள்ளன.
இதில், அரவக்குறிச்சி பேரூராட்சியில் தி.மு.க. 10 இடங்களிலும், அ.தி.மு.க. 2 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒரு இடத்திலும், சுயேச்சை ஒருவரும் வெற்றி பெற்றனர்.
புலியூர் பேரூராட்சியில் தி.மு.க. 12 இடங்களிலும், பா.ஜனதா 1 இடத்திலும், இந்திய கம்யூனிஸ்டு 1 இடத்திலும், சுயேச்சை வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றனர்.
உப்பிடமங்கலம் பேரூராட்சியில் தி.மு.க. 14 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றனர்.
கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் தி.மு.க. 14 இடங்களிலும், அ.தி.மு.க. 1 இடத்திலும் வெற்றி பெற்றனர்.
மருதூர் பேரூராட்சியில் தி.மு.க. 13 இடங்களிலும், அ.தி.மு.க. 1 இடத்திலும், சுயேச்சை வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றனர்.
பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியில் தி.மு.க. 11 இடங்களிலும், அ.தி.மு.க. 1 இடத்திலும், பா.ஜனதா 1 இடத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 1 இடத்திலும், சுயேச்சை வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றனர்.
புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் தி.மு.க. 12 இடங்களிலும், அ.தி.மு.க. 2 இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றனர்.
நங்கவரம் பேரூராட்சியில் தி.மு.க. 15 இடங்களிலும், அ.தி.மு.க. 1 இடத்திலும், சுயேச்சை வேட்பாளர்கள் 2 பேரும் வெற்றி பெற்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 8 பேரூராட்சிகள் உள்ளன. தலா 15 வார்டுகள் உள்ளன. இதில் ஆலங்குடி பேரூராட்சியில் தி.மு.க. 9 வார்டுகளிலும், அ.தி.மு.க. 2 வார்டுகளிலும், சுயேச்சைகள் 4 வார்டுகளிலும், கீரனூர் பேரூராட்சியில் தி.மு.க. 12 வார்டுகளிலும், அ.மு.மு.க. ஒரு வார்டிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒரு வார்டிலும், சுயேச்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றனர். அரிமளம் பேரூராட்சியில் தி.மு.க.-8, காங்கிரஸ்-2, தே.மு.தி.க.-2, அ.தி.மு.க.-1, சுயேச்சை 2 வார்டுகளில் வெற்றி பெற்றனர். அன்னவாசல் பேரூராட்சியில் அ.தி.மு.க.-8, தி.மு.க.-5, காங்கிரஸ்-1, சுயேச்சை ஒரு வார்டிலும், கீரமங்கலம் பேரூராட்சியில் தி.மு.க.-10, காங்கிரஸ்-1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-1, இந்திய கம்யூனிஸ்டு-1, சுயேச்சைகள் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.
கறம்பக்குடியில் தி.மு.க.-10, காங்கிரஸ்-1, அ.தி.மு.க.-2, சுயேச்சைகள்-2, பொன்னமராவதி பேரூராட்சியில் தி.மு.க.-10, அ.தி.மு.க.-3, காங்கிரஸ்-1, சுயேச்சை ஒரு வார்டிலும், இலுப்பூர் பேரூராட்சியில் தி.மு.க.-7, அ.தி.மு.க.-3, சுயேச்சைகள் 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.

Next Story