திருவள்ளூர் மாவட்டத்தில் 5 பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியது


திருவள்ளூர் மாவட்டத்தில் 5 பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியது
x
தினத்தந்தி 23 Feb 2022 2:18 PM IST (Updated: 23 Feb 2022 2:18 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளில் 5 பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியது. பொதட்டூர்பேட்டை பேரூராட்சி அ.தி.மு.க. வசமானது.

ஊத்துக்கோட்டை,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 10 ஆயிரத்து 471 வாக்காளர்கள் உள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 12-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் வெங்கடேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மீதமுள்ள 14 வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க., உள்பட 59 பேர் போட்டியிட்டனர். அதில், தி.மு.க. வேட்பாளர்கள் 12 இடங்களில் அமோக வெற்றி பெற்றனர். 2 வார்டுகளில் மட்டும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

1-வது வார்டு-சமீமா (தி.மு.க.)-646

2-வது வார்டு- இந்துமதி(தி.மு.க.)-202

3-வது வார்டு-அப்துல் ரஷீத் (தி.மு.க.)-180

4-வது வார்டு-அபிராமி(தி.மு.க.)-234

5-வது வார்டு-கோகுலகிருஷ்ணன்(தி.மு.க.)-121

6-வது வார்டு-ஆனந்தி (அ.தி.மு.க.)-443

7-வது வார்டு-குமரவேல் (தி.மு.க.)-392

8-வது வார்டு-திருபுரசுந்தரி (தி.மு.க.)-293

9-வது வார்டு-ஜீவா (தி.மு.க.)- 244

10-வது வார்டு-அப்தாபேகம் (தி.மு.க.)-154

11-வது வார்டு-மணிகண்டன் (தி.மு.க.)-284

12-வார்டு வெங்கடேசன்-(தி.மு.க.)-போட்டியின்றி தேர்வு.

13-வது. வார்டு-கல்பனா (தி.மு.க.)-366

14-வது வார்டு -சுமலதா (தி.மு.க.)-313

15-வது வார்டு-அருணாச்சலம் (அ.தி.மு.க.)-281

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விவரம் பின்வருமாறு.

1-வது வார்டு-காளிதாஸ் (தி.மு.க.)-862

2-வது வார்டு-சசிகலா அறிவழகன் (தி.மு.க)-250

3-வது வார்டு-அப்துல்கறீம் (சுயே)-397

4-வது வார்டு-எஸ்.ரவி (அ.தி.மு.க)-347

5-வது வார்டு-எஸ்.கருணாகரன் (தி.மு.க)- 308

6-வது வார்டு -மு.கேசவன் (அ.தி.மு.க)-569

7-வது வார்டு-துர்கேஸ்வரி பாஸ்கர் (தி.மு.க)-350

8-வது வார்டு -கீதாராணி (தி.மு.க)-459

9-வது வார்டு-நஸ்ரத் இஸ்மாயில் (தி.மு.க)-527

10-வது வார்டு-தீபா முனுசாமி (அ.தி.மு.க)- 500

11-வது வார்டு-ஜோதி (பா.ம.க)-405

12-வது வார்டு-குமரபூபதி (தி.மு.க)-220

13-வது வார்டு-விமலா அர்ஜீன் (தி.மு.க)-476

14-வது வார்டு-எம்.குப்பன் (தி.மு.க)-368

15-வது வார்டு-ராஜேஸ்வரி (வி.சி.க)-202

இதில் 15 இடங்களில் தி.மு.க. அதன் கூட்டணி கட்சியுடன் சேர்ந்து 10 இடங்களையும், அ.தி.மு.க. 3 இடங்களையும், பா.ம.க ஒரு இடத்தையும், சுயேச்சை ஒரு இடத்தையும் பிடித்து உள்ளனர்.

பள்ளிப்பட்டு பேரூராட்சி

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 4-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் ராணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, மீதியுள்ள 14 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றன. மொத்தமுள்ள 7,516 வாக்காளர்களில் 5,813 வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்தனர். பள்ளிப்பட்டு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வாக்குகள் எண்ணிக்கை என்னும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தேர்தல் அலுவலர் பசுபதி முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடக்கத்தில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் அறிவிக்கப்பட்டன. இதில் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் உள்ள பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 13 வார்டுகளை தி.மு.க. கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. 2 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

வார்டுகள் வாரியாக வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம்:-

1-வது வார்டு-டென்னிஸ் என்கிற பிரேம் ஆனந்த் (தி.மு.க.)-170

2-வது வார்டு-விஜியலு(தி.மு.க.)-279

3-வது வார்டு-பானு(சுயே) -153

4-வது வார்டு- ராணி(தி.மு.க.)போட்டியின்றி தேர்வு

5-வது வார்டு-புவனா(தி.மு.க.)- 197

6-வது வார்டு-உமா(தி.மு.க.)- 207

7-வது வார்டு-அஷ்மா(தி.மு.க.)-218

8-வது வார்டு-சுவப்னா(தி.மு.க.)-221

9-வது வார்டு-குணசேகர்(தி.மு.க.)- 187

10-வது வார்டு-ஜெயலட்சுமி(தி.மு.க.)-254

11-வது வார்டு-ஜோதிகுமார்(தி.மு.க.)-340

12-வது வார்டு-செந்தில்குமார்(தி.மு.க.)-350

13-வது வார்டு-கபிலா(தி.மு.க.)-213

14-வது வார்டு-மணிமேகலை(தி.மு.க.)-335

15-வது வார்டு-செல்வராணி(சுயே)-365

பொதட்டூர்பேட்டை பேரூராட்சி

பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் 13 வார்டுகளை கைப்பற்றி அ.தி.மு.க. வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர். விபரம் வருமாறு:-

1-வது வார்டு-குணசேகரன்-(அ.தி.மு.க.)- 453

2-வது வார்டு-பிரகாஷ்(தி.மு.க.)-614

3-வது வார்டு-அனுசுயா(தி.மு.க.)- 845

4-வது வார்டு-மோகன்குமார்(அ.தி.மு.க.)-547

5-வது வார்டு-பூபதி(அ.தி.மு.க.)-696

6-வது வார்டு-ஜீவா(அ.தி.மு.க.)-452

7-வது வார்டு-சரளாதேவி(அ.தி.மு.க.)- 623

8-வது வார்டு-சத்யா(காங்)- 577

9-வது வார்டு-இலட்சுமி(அ.தி.மு.க.)- 423

10-வது வார்டு-ஜீவானந்தம்(அ.தி.மு.க.)- 529

11-வது வார்டு-சுப்பிரமணி(தி.மு.க.)- 351

12-வது வார்டு-ராமகிருஷ்ணன்(அ.தி.மு.க.)- 300

13-வது வார்டு-தவமணி(அ.தி.மு.க.)-561

14-வது வார்டு-பாரதி(தி.மு.க.)-321

15-வது வார்டு-பழனி(அ.தி.மு.க.)- 509

16-வது வார்டு-ரவிச்சந்திரன்(அ.தி.மு.க.)- 567

17-வது வார்டு-ஆதியம்மாள்(அ.தி.மு.க.)-456

18-வது வார்டு-திலகவதி(அ.தி.மு.க.)- 689.

மீஞ்சூர் பேரூராட்சி

மீஞ்சூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 12 தி.மு.க. வேட்பாளர்கள், 3 சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அ.தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்கள் தலா ஒரு இடம் வெற்றி பெற்றனர்.

1-வது வார்டு சுகன்யா (தி.மு.க)-454

2-வது வார்டு அபுபக்கர்சித்திக் (தி.மு.க)-779

3-வது வார்டு அலெக்சாண்டர் (தி.மு.க)-559

4-வது வார்டு ரஜினி (சுயே)-390

5-வது வார்டு ஜெயலட்சுமி (சுயே)-307

6-வது வார்டு ஜெயலட்சுமி (தி.மு.க)-505

7-வது வார்டு ஜோதிலட்சுமி (தி.மு.க)-413

8-வது வார்டு குமாரி (தி.மு.க)-276

9-வது வார்டு துரைவேல்பண்டியன் (காங்)-368

10-வது வார்டு ருக்மணி (தி.மு.க)-448

11-வது வார்டு சுமதி (தி.மு.க)-576

12-வது வார்டு பாஸ்கர் (தி.மு.க)-635

13-வது வார்டு கவிதா (தி.மு.க)-286

14-வது வார்டு சங்கீதா (தி.மு.க)-480

15-வது வார்டு பரிமளா (சுயே)-326

16-வது வார்டு நக்கீரன் (சுயே)-311

17-வது வார்டு மோனிகா (தி.மு.க)-483

18-வது வார்டு ராஜன் (அ.தி.மு.க)-467

ஆகியோர் வெற்றி பெற்று மீண்டும் தி.மு.க. மீஞ்சூர் பேரூராட்சியை கைப்பற்றியுள்ளது.

நாரவாரிகுப்பம் பேரூராட்சி

நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 10 தி.மு.க. வேட்பாளர்கள், 2 அ.தி.மு.க. வேட்பாளர்கள், ஒரு காங்கிரஸ் வேட்பாளர், 5 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

1-வது வார்டு பபிதா (தி.மு.க)-617

2-வது வார்டு லதா (தி.மு.க)-410

3-வது வார்டு சகாதேவன் (தி.மு.க)-293

4-வது வார்டு கார்த்திக்கோட்டீஸ்வரன் (தி.மு.க)-545

5-வது வார்டு தெய்வானைகபிலன் (தி.மு.க)-945

6-வது வார்டு லீலாவதி (இ.தே.கா)-574

7-வது வார்டு ரமேஷ் (சுயே)-222

8-வது வார்டு வினோதினி (சுயே)-256

9-வது வார்டு அமுதாஆசைதம்பி (அ.தி.மு.க)-452

10-வது வார்டு கோமதி (சுயே)-454

11-வது வார்டு விப்ரநாராயணன் (தி.மு.க)-676

12-வது வார்டு ஸ்ரீதேவி (சுயே)-331

13-வது வார்டு தமிழரசி (தி.மு.க)-365

14-வது வார்டு மோகன் (சுயே)-267

15-வது வார்டு கலைவாணி (தி.மு.க)-589

16-வது வார்டு ராதாகிருஷ்ணன் (அ.தி.மு.க)-342

17-வது வார்டு இளங்கோவன் (தி.மு.க)-309

18-வது வார்டு கோதண்டராமன் (தி.மு.க)-620

திருமழிசை பேரூராட்சி

திருமழிசை பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் தி.மு.க.கூட்டணி 7 இடங்களிலும், அ.தி.மு.க. 6 இடங்களிலும் வென்றுள்ளது. சுயேச்சை 2 இடங்களிலும் வென்றுள்ளது. பேரூராட்சியை கைப்பற்றுவதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

ஆரணி பேரூராட்சி

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 10 வார்டுகளை சுயேச்சை வேட்பாளர்கள் கைப்பற்றினர். 3 இடங்களில் தி.மு.க.வும், அ.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா 1 வார்டுகளை கைப்பற்றினர்.

மொத்தமுள்ள 8 பேரூராட்சிகளில் 6 பேரூராட்சிகளை தி.மு.க.வும், 1 பேரூராட்சியை அ.தி.மு.க.வும், திருமழிசை பேரூராட்சி மட்டும் இழுபறியிலும் உள்ளது.

Next Story