தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா தொற்று குறைந்து உள்ளது. நேற்று மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 64 ஆயிரத்து 910 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று 18 பேர் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். இதுவரை மொத்தம் 64 ஆயிரத்து 361 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் 102 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 447 ஆக உள்ளது.
Related Tags :
Next Story