ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
திருப்பூர்,
திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் கடந்த 3-ந் தேதி தாராபுரம் குண்டடம் அருகே ருத்ராவதி பஸ் நிறுத்தம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சரக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் பழனி சிவகிரி பட்டியை சேர்ந்த பால் செல்வராஜ் (வயது 48), ஆயக்குடியை சேர்ந்த மணிகண்டன் (33) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
இந்தநிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவின் பேரில் பால் செல்வராஜை குண்டர் சட்டத்தில் போலீசார் நேற்று சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story