‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாக்கடை கால்வாய் வசதி
போடி தாலுகா காமராஜபுரம் ஊராட்சி மாணிக்காபுரம் மேற்கு தெருவில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் திறந்த வெளியில் செல்வதோடு, துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகமாக இருக்கிறது. எனவே சாக்கடை கால்வாய் வசதி செய்து தரவேண்டும். -கணேசன், மாணிக்காபுரம்.
மின்சார மீட்டர் பெட்டி
சின்னமனூர் நகராட்சி 18-வது வார்டு வ.உ.சி. 4-வது தெருவில் ஆழ்துளை கிணற்றில் இருந்து குடிநீர் தொட்டிக்கு ஏற்றுவதற்கு மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதற்கான மின்சார மீட்டர் பெட்டி வைக்கப்பட்டுள்ள சிறிய அறை திறந்து கிடக்கிறது. குழந்தைகள் விளையாடும் பகுதி என்பதால் மின்சார மீட்டர் பெட்டியை பாதுகாப்பாக வைக்க கதவு பொருத்த வேண்டும். -சிவாஜி, சின்னமனூர்.
சுகாதார நிலைய கட்டிடம்
குஜிலியம்பாறை தாலுகா கோவிலூர் அரசு ஆரம்ப நிலைய கட்டிடத்தின் மேற்கூரை, சுவர்கள் சேதம் அடைந்து விட்டன. தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்லும் சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சண்முகம், கோவிலூர்.
குப்பை குவியல் (படம்)
திண்டுக்கல்-திருச்சி சாலையில் என்.ஜி.ஓ.காலனியை அடுத்து சி.டி.ஓ. காலனிக்கு திரும்பும் இடத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அதில் கழிவுகளும் கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை உடனடியாக அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -தனம், திண்டுக்கல்.
Related Tags :
Next Story