வெப்பத்தின் தாக்குதல் எதிரொலியாக மானாவாரி நிலக்கடலை சாகுபடி பாதிக்கப்பட்டது


வெப்பத்தின் தாக்குதல் எதிரொலியாக மானாவாரி நிலக்கடலை சாகுபடி பாதிக்கப்பட்டது
x
தினத்தந்தி 23 Feb 2022 9:48 PM IST (Updated: 23 Feb 2022 9:48 PM IST)
t-max-icont-min-icon

வெப்பத்தின் தாக்குதல் எதிரொலியாக மானாவாரி நிலக்கடலை சாகுபடி பாதிக்கப்பட்டது

தளி, 
வெப்பத்தின் தாக்குதல் எதிரொலியாக மானாவாரி நிலக்கடலை சாகுபடி பாதிக்கப்பட்டது.இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நிலக்கடலை சாகுபடி
உடுமலை, தளி சுற்றுவட்டாரப் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள் திருமூர்த்தி, அமராவதி அணைகள், கிணறு, ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் பருவமழையை ஆதாரமாகக்கொண்டு சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
தென்னை, வாழை, கொய்யா, சப்போட்டா போன்ற நீண்டகால பயிர்களையும், காய்கறிகள், கீரைகள், உள்ளிட்டவற்றையும் மானாவாரி மற்றும் கிணற்றுப் பாசனத்தின் மூலம் தானியங்கள், எண்ணெய் வித்துக்களையும் சாகுபடி செய்து வருகின்றனர். அந்தவகையில் தளி பகுதியில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
 தண்ணீர் பற்றாக்குறை
 வடகிழக்கு பருவமழைக்கு பின்பு நிலத்தை உழுது பண்படுத்தி நிலக்கடலை சாகுபடியை தொடங்கி உள்ளோம். நிலக்கடலை 90 நாள் பயிராகும். ஏக்கருக்கு 70 கிலோ விதைகள் தேவைப்படுகிறது. உழவு, விதைப்பு, பராமரிப்பு, உரம் உள்ளிட்டவற்றுக்கு ஏக்கருக்கு சுமார் ரூ.25 ஆயிரம் வரையிலும் செலவாகிறது. புரதச்சத்துக்கள் நிறைந்த நிலக்கடலை பர்பி, உருண்டை வடிவத்தில் உணவாகவும், எண்ணெய், புண்ணாக்கு உள்ளிட்ட வகையிலும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதுவும் மரச்செக்கில் இருந்து தயாரித்த எண்ணெய்க்கு கூடுதல் மவுசு உள்ளது.
இதனால் சமீபகாலமாக நிலக்கடலைக்கான தேவை அதிகரித்து வருகிறது. எனவே நிலக்கடலை சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றோம். ஆனால் கடந்த சில நாட்களாக நிலவி வருகின்ற கடும் வெப்பத்தால் தரிசு நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. 
இவ்வாறு தெரிவித்தனர்.

Next Story