காதலனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை


காதலனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 23 Feb 2022 10:20 PM IST (Updated: 23 Feb 2022 10:20 PM IST)
t-max-icont-min-icon

இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் காதலனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

விழுப்புரம், 

கண்டமங்கலம் அருகே உள்ள ரசபுத்திரப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் மகன் பிரகாஷ் (வயது 35). இவரும், கண்டமங்கலத்தை சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண்ணும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
அப்போது கடந்த 2019-ம் ஆண்டில் அந்த பெண்ணிடம் பிரகாஷ் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. பின்னர், அந்த பெண், பிரகாசிடம் சென்று தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி கேட்டதற்கு அவர் திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

10 ஆண்டு சிறை

இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட பிரகாசுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 3 மாத காலத்திற்குள் ரூ.2 லட்சத்தை இழப்பீடாக பிரகாஷ் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட பிரகாஷ், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சங்கீதா ஆஜரானார்.

Next Story