ரூ.12¾ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

x
தினத்தந்தி 24 Feb 2022 12:55 AM IST (Updated: 24 Feb 2022 12:55 AM IST)
ரூ.12¾ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
செம்பட்டு, பிப்.24-
துபாயில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது மதுரையை சேர்ந்த பொன்முடி (வயது 48) என்ற பயணி தனது கைப்பையில் மறைத்து 250 கிராம் தங்கத்தை சுருள் வடிவில் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.12 லட்சத்து 84 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire