4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு சாகும் வரை சிறை

கீழக்கரையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் கோர்ட்டு உத்தரவிட்டது.
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு சாகும் வரை சிறை
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பழைய குத்பா பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் காஜாமுகமது (வயது 40).

கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 14-ந் தேதி 4 வயது சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, இவர் அந்த சிறுமியை மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு பாலியல் தால்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளாள்..

இதன்பேரில் சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் கீழக்கரை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காஜா முகமதுவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் விரைவு மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சுபத்திரா, 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காஜா முகமதுவுக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் அதனை கட்ட தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க நீதிபதி பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கீதா ஆஜரானார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com