திருப்பத்தூர் மாவட்டத்தில்1 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது


திருப்பத்தூர் மாவட்டத்தில்1 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது
x
தினத்தந்தி 24 Feb 2022 1:09 AM IST (Updated: 24 Feb 2022 1:09 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

திருப்பத்தூர்

நாடு முழுவதும் வருகிற 27-ந் தேதி 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டுமருத்து வழங்கப்பட உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 709 முகாம்களில் 1,08,169 குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கப்படுகிறது. 2,275 பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை கொண்டு வழங்கப்படுகிறது. மேலும் 5 நடமாடும் முகாம்கள் மூலமும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பணிகளை 90 மேற்பார்வை குழுக்கள் மூலம் கண்காணிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட அனைத்துத்துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையி நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பத்தூர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் செந்தில் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story