டாக்டர் இல்லாததால் பல்வலிக்கு சிகிச்சை பெறாமல் ஜெயிலுக்கு திரும்பிய முருகன்
டாக்டர் இல்லாததால் பல்வலிக்கு சிகிச்சை பெறாமல் முருகன் ஜெயிலுக்கு திரும்பினார்.
அடுக்கம்பாறை
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், நளினி உள்ளிட்டோர் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் ஜெயிலில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். முருகன் கடந்த சில மாதங்களாக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து, பல் வலிக்கு சிகிச்சை பெற்று செல்கிறார். கடந்த 2 நாட்களாக பல்வலியால் முருகன் அவதிப்பட்டு வந்தார்.
இதையடுத்து ஜெயில் டாக்டர்கள் முருகனை அடுக்கம்பாறை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்தனர். அதன்படி நேற்று காலை பலத்த காவலுடன் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு முருகன் அழைத்து செல்லப்பட்டார். ஆனால் முன்கூட்டியே ஆஸ்பத்திரி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்காமல் முருகனை அழைத்துச் சென்றதால், அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் விடுமுறையில் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து முருகனுக்கு சிகிச்சை அளிக்காமல் போலீசார் ஏமாற்றத்துடன் மீண்டும் ஜெயிலுக்கு திரும்பினர். வேறொரு நாளில் அவரை சிகிச்சை பெற அழைத்து செல்ல உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story