தஞ்சை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்ட 282 பேரில், 181 பேர் டெபாசிட் இழப்பு


தஞ்சை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்ட 282 பேரில், 181 பேர் டெபாசிட் இழப்பு
x
தினத்தந்தி 24 Feb 2022 1:17 AM IST (Updated: 24 Feb 2022 1:17 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்ட 282 பேரில், 181 பேர் டெபாசிட் தொகையை இழந்தனர். இதில் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணி வேட்பாளரும் தவறவில்லை.

தஞ்சாவூர்:-

தஞ்சை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்ட 282 பேரில், 181 பேர் டெபாசிட் தொகையை இழந்தனர். இதில் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணி வேட்பாளரும் தவறவில்லை.

181 பேர் டெபாசிட் தொகை இழப்பு

தேர்தலில் போட்டியிட ஒரு வேட்பாளர் முன்பணம் கட்டுவதை டெபாசிட் தொகை என்பார்கள். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதில் பதிவான மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் 6-ல் 1 பங்கு பெற தவறியவர்கள் தங்கள் டெபாசிட் தொகையை இழக்க நேரிடும்.
தஞ்சை மாநகராட்சி தேர்தலில் 51 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 282 பேர் போட்டியிட்டனர். இவர்களில் 181 பேர், தங்கள் டெபாசிட் தொகையை இழந்தனர். வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் அதற்கு அடுத்த நிலையில் வந்த வேட்பாளர்கள் என 81 பேர் மட்டுமே டெபாசிட் தொகையை பெற்றுள்ளனர்.

வார்டு வாரியாக விவரம்

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் ஒவ்வொரு வார்டிலும் போட்டியிட்டவர்களின் எண்ணிக்கை, டெபாசிட் தொகையை இழந்தவர்கள் எண்ணிக்கை வருமாறு:-
1-வது வார்டில் போட்டியிட்ட 6 பேரில், 4 பேரும், 2-வது வார்டில் 4-ல் 2 பேரும், 3-வது வார்டில் 6-ல் 4 பேரும், 4-வது வார்டில் 5-ல் 3 பேரும், 5-வது வார்டில் 4-ல் 2 பேரும், 6-வது வார்டில் 4-ல் 2 பேரும், 7-வது வார்டில் 8-ல் 7 பேரும், 9-வது வார்டில் 6-ல் 4 பேரும், 10-வது வார்டில் 6-ல் 4 பேரும், 11-வது வார்டில் 4-ல் 2 பேரும், 12-வது வார்டில் 4-ல் 2 பேரும், 13-வது வார்டில் 3-ல் ஒருவரும், 14-வது வார்டில் 6-ல் 4 பேரும் டெபாசிட் தொகையை இழந்தனர். 
15-வது வார்டில் 4-ல் 2 பேரும், 16-வது வார்டில் 4-ல் 3 பேரும், 17-வது வார்டில் 6-ல் 5 பேரும், 18-வது வார்டில் 7-ல் 5 பேரும், 19-வது வார்டில் 7-ல் 5 பேரும், 20-வது வார்டில் 9-ல் 6 பேரும், 21-வது வார்டில் 5-ல் 3 பேரும், 22-வது வார்டில் 4-ல் 2 பேரும், 23-வது வார்டில் 6-ல் 4 பேரும், 24-வது வார்டில் 6-ல் 4 பேரும், 25-வது வார்டில் 6-ல் 3 பேரும், 27-வது வார்டில் 6-ல் 4 பேரும், 28-வது வார்டில் 4-ல் 3 பேரும், 29-வது வார்டில் 4-ல் 2 பேரும், 30-வது வார்டில் 6-ல் 4 பேர். 

31 முதல் 51 வார்டு வரை....

31-வது வார்டில் 6-ல் 4 பேரும், 32-வது வார்டில் 8-ல் 6 பேரும், 33-வது வார்டில் 6-ல் 3 பேரும், 34-வது வார்டில் 6-ல் 4 பேரும், 35-வது வார்டில் 5-ல் 3 பேரும், 36-வது வார்டில் 6-ல் 3 பேரும், 37-வது வார்டில் 5-ல் 2 பேரும், 38-வது வார்டில் 5-ல் 4 பேரும், 39-வது வார்டில் 5-ல் 3 பேரும், 40-வது வார்டில் 5-ல் 3 பேரும் டெபாசிட் தொகையை இழந்தனர்.
41-வது வார்டில் 5-ல் 2 பேரும், 42-வது வார்டில் 6-ல் 3 பேரும், 43-வது வார்டில் 5-ல் 2 பேரும், 44-வது வார்டில் 9-ல் 6 பேரும், 45-வது வார்டில் 6-ல் 5 பேரும், 46-வது வார்டில் 5-ல் 3 பேரும், 47-வது வார்டில் 5-ல் 3 பேரும், 48-வது வார்டில் 4-ல் 3 பேரும், 49-வது வார்டில் 7-ல் 6 பேரும், 50-வது வார்டில் 5-ல் 4 பேரும், 51-வது வார்டில் 6-ல் 5 பேரும் டெபாசிட் தொகையை இழந்தனர்.
அ.தி.மு.க.-தி.மு.க. கூட்டணி வேட்பாளர்
இதில் 7, 16, 17, 19, 28, 38, 39, 45, 48, 49, 50, 51 ஆகிய 12 வார்டுகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்தனர். மேலும் அரசியல் கட்சிகளை சேர்ந்த பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் பலரும் டெபாசிட் தொகையை இழந்தனர். தி.மு.க. கூட்டணியில் 36-வது வார்டியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரும் டெபாசிட் தொகையை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story