ஈரோடு சூரம்பட்டி மாகாளியம்மன் கோவில் குண்டம் விழா


ஈரோடு சூரம்பட்டி மாகாளியம்மன் கோவில் குண்டம் விழா
x
தினத்தந்தி 24 Feb 2022 1:45 AM IST (Updated: 24 Feb 2022 1:45 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு சூரம்பட்டி மாகாளியம்மன் கோவிலில் குண்டம் விழா நடைபெற்றது

ஈரோடு சூரம்பட்டி பகுதியில் பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குண்டம் மற்றும் பொங்கல் விழா கடந்த 15-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் கரகம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை 4 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கோவில் பூசாரி மற்றும் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். அதைத்தொடர்ந்து கோவில் முன்பு பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.
இதையொட்டி மாகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 
சூரம்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.
1 More update

Next Story