மாயமான மத்திய ரிசர்வ் படை வீரரை கண்டுபிடிக்க எடுத்த நடவடிக்கை என்ன?-அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மாயமான மத்திய ரிசர்வ் படை வீரரை கண்டுபிடிக்க எடுத்த நடவடிக்கை என்ன?-அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 24 Feb 2022 1:53 AM IST (Updated: 24 Feb 2022 1:53 AM IST)
t-max-icont-min-icon

மாயமான மத்திய ரிசர்வ் படை வீரரை கண்டுபிடிக்க எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை, 

மாயமான மத்திய ரிசர்வ் படை வீரரை கண்டுபிடிக்க எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மத்திய ரிசர்வ் படை வீரர்

  ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த வனிதா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
  எனது கணவர் பாலமுருகன். சத்தீஸ்கார் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் படை வீரராக பணியாற்றினார். கடந்த அக்டோபர் மாதம் 17-ந்தேதி முதல் அவரை காணவில்லை என அவர் பணிபுரியும் இடத்தில் இருந்து தெரிவித்தனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. எனவே எனது கணவரை கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
  இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அறிக்கை

  அப்போது மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் கணவர் உபயோகப்படுத்திய பழைய செல்போனில் இருந்த சிம்கார்டு எண் மாற்றப்பட்டு, புதிய சிம்கார்டு எண் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர் இருக்கும் இடம் தெரியவந்துள்ளது. மேலும் புதிய செல்போன் எண் மூலம் யாரிடம் பேசி உள்ளார் என்பது குறித்த விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது என்றார்.
  மனுதாரர் கணவரை கண்டுபிடிக்க எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை மார்ச் மாதம் 23-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story