கடையம் அருகே முள்ளிமலை பொத்தையில் தீ விபத்து


கடையம் அருகே  முள்ளிமலை பொத்தையில் தீ விபத்து
x
தினத்தந்தி 24 Feb 2022 2:10 AM IST (Updated: 24 Feb 2022 2:10 AM IST)
t-max-icont-min-icon

முள்ளிமலை பொத்தையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது

கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மீனாட்சிபுரத்தில் முள்ளிமலை பொத்தை உள்ளது. இது வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த பொத்தையில் மரங்கள், செடிகள் உள்ளன. இந்த பொத்தையில் மேற்கு பகுதியில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்ட இயக்குனர் செண்பகப்பிரியா உத்தரவின் படி, வனச்சரகர் (பொ) பரத் அறிவுறுத்தல்படி வனவர் முருகசாமி தலைமையில் வனக் காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

Next Story