ஈரோடு ரெயில் நிலையம் அருகே சாக்கடையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை சாவு
சாக்கடையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை இறந்தது.
ஈரோடு ரெயில் நிலையம் முன்பு உள்ள சாக்கடையில் நேற்று முன்தினம் மதியம் தொப்புள் கொடியுடன் பிறந்து 2 மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை கிடந்தது. அந்த வழியாக வந்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, இதுபற்றி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று அந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி பச்சிளம் குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையை சாக்கடையில் வீசி சென்ற பெண் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story