சேலம் மாவட்டத்தில் புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று


சேலம் மாவட்டத்தில் புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 24 Feb 2022 2:23 AM IST (Updated: 24 Feb 2022 2:23 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சேலம், 
சேலம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 21 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சேலம் மாநகராட்சியில் 8 பேர், ஓமலூர், வாழப்பாடி, மேட்டூர், வீரபாண்டியில் தலா 2 பேர், சங்ககிரி, காடையாம்பட்டி, அயோத்தியாப்பட்டணம், ஆத்தூரில் தலா ஒருவருக்கும், நாமக்கல்லில் இருந்து சேலத்துக்கு வந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 216 ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 102 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 487 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்ட சேலத்தை சேர்ந்த 70 வயது முதியவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 1,762 ஆக அதிகரித்துள்ளது.


Next Story