6 பேரூராட்சிகளில் 11 வார்டுகளில் டெபாசிட் இழந்த அ.தி.மு.க.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 பேரூராட்சிகளில் 11 வார்டுகளில் அ.தி.மு.க. டெபாசிட் இழந்தது. காவேரிப்பட்டணத்தில் ஒரு வார்டில் கூட டெபாசிட் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 பேரூராட்சிகளில் 11 வார்டுகளில் அ.தி.மு.க. டெபாசிட் இழந்தது. காவேரிப்பட்டணத்தில் ஒரு வார்டில் கூட டெபாசிட் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.க.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சியில் 15-வது வார்டில் போட்டியிட்ட ராஜேந்திரன் 86 வாக்குகள் மட்டும் பெற்று டெபாசிட் இழந்தார். அதேபோல் கெலமங்கலம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 4, 8 ஆகிய 2 வார்டுகளில் அ.தி.மு.க. சார்பில் யாரும் போட்டியிடவில்லை.
இதில் 5-வது வார்டில் மஞ்சுநாத் 72 வாக்குகளும், 7-வது வார்டில் கே.எஸ்.மஞ்சுநாத் 5 வாக்குகளும், 9-வது வார்டில் சந்திரா 51 வாக்குகளும் பெற்று 3 பேரும் டெபாசிட் இழந்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் உள்ள 17 வார்டுகளில் 5, 7, 8, 9, 12, 13, 14, 15 ஆகிய 8 வார்டுகளில் அ.தி.மு.க. சார்பில் யாரும் போட்டியிடவில்லை. 4-வது வார்டில் லட்சுமி 115 வாக்குகளும், 16-வது வார்டில் ராமமூர்த்தி 96 வாக்குகளும் பெற்று டெபாசிட் இழந்தனர்.
நாகோஜனஅள்ளி பேரூராட்சியில் 15 வார்டுகளில் 13-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் யாரும் போட்டியிடவில்லை. 6-வது வார்டில் விஜியா 80 வாக்குகளும், 9-வது வார்டில் வேடியப்பன் 33 வாக்குகளும் பெற்று டெபாசிட் இழந்தனர்.
பர்கூர்
பர்கூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 1-வது வார்டில் செல்வி 28 வாக்குகளும், 4-வது வார்டில் சந்திரா 105 வாக்குகளும், 15-வது வார்டில் சரண்யா 15 வாக்குகளும் மட்டும் பெற்று டெபாசிட் இழந்தனர்.
காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் 15 வார்டுகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இங்கு யாரும் டெபாசிட் வாங்கவில்லை.
Related Tags :
Next Story






