மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்; 20 பேர் காயம்
மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய 20 பேர் காயம் அடைந்தனர்.
கொட்டாம்பட்டி,
மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய 20 பேர் காயம் அடைந்தனர்.
மஞ்சுவிரட்டு
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே வெள்ளினிப்பட்டியில் உள்ள சதுரகிரி மலை அடிவாரத்தில் ஆண்டி கருப்பு சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு ஐந்து நிலை நாடு வெள்ளினிப்பட்டி கிராமம் சார்பில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.
வெள்ளினிப்பட்டி மந்தையில் இருந்து கிராமத்தினர் ஜவுளி எடுத்து கொண்டு மேள, தாளத்துடன் ஊர்வலமாக ஆண்டி கருப்பு சுவாமி கோவிலுக்கு வந்தனர். அங்கு வழிபட்ட பின்னர் சிங்கம்புணரி சேவுக மூர்த்தி கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் கிராம கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதன்பின் மற்ற காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
20 பேர் காயம்
சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினார்கள். சில காளைகள் பிடிபட்டன. சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் ஓடி பரிசுகளை வென்றன.
காளைகள் முட்டியதில் 20 பேர் காயம் அடைந்தனர். இந்த மஞ்சுவிரட்டை ஏராளமானோர் பார்வையிட்டனர். கொட்டாம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story