விரிகோடு-கொல்லஞ்சி சாலைப்பணியை முடிக்காததால் பொதுமக்கள் திடீர் போராட்டம்


விரிகோடு-கொல்லஞ்சி  சாலைப்பணியை முடிக்காததால் பொதுமக்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 24 Feb 2022 2:51 AM IST (Updated: 24 Feb 2022 2:51 AM IST)
t-max-icont-min-icon

விரிகோடு-கொல்லஞ்சி சாலைப்பணியை முடிக்காததால் பொதுமக்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குழித்துறை, 
விரிகோடு-கொல்லஞ்சி சாலைப்பணியை முடிக்காததால் பொதுமக்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலைப்பணி
மார்த்தாண்டம் அருகே விரிகோடு-கொல்லஞ்சி சாலையில் தார் சாலை போடும் பணி நடந்தது. விரிகோடு படிப்பகத்தில் தொடங்கிய பணி நேற்று மாலையில் இளமண்டி குளம் பகுதியில் தொடர்ந்தது. 
அப்போது திடீரென்று சாலை பணியை பாதியிலேயே நிறுத்தி விட்டு பணியாளர்கள் செல்ல முற்பட்டனர்.
முற்றுகை
இதை கேள்விப்பட்டதும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானவர்கள் அங்கு திரண்டனர். அவர்கள் சாலை பணியை முழுவதும் முடித்துவிட்டு செல்ல வேண்டும் என்று கூறி ரோடு ரோலர் மற்றும் பணியாளர்களை தடுத்து நிறுத்தி திடீரென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும், மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் பேசினார். பின்னர் பொதுமக்களின் கோரிக்கையை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கூறினார். 
அதை தொடர்ந்து ஒரு வாரத்தில் சாலைப்பணியை முழுமையாக முடிப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறினார்கள். அதை ஏற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story