கைதிகளுக்கு முதலுதவி அளிப்பது குறித்து பயிற்சி
வேலூர் ஜெயில் காவலர் பயிற்சி பள்ளியில் கைதிகளுக்கு முதலுதவி அளிப்பது குறித்து பயிற்சி
வேலூர்
தமிழகத்தில் உள்ள ஜெயில்களில் பணியாற்றும் 160 ஜெயில் காவலர்களுக்கு 5 நாட்கள் புத்தாக்க பயிற்சி வேலூர் ஜெயில் காவலர் பயிற்சி பள்ளியில் கடந்த 21-ந் தேதி தொடங்கியது.
பயிற்சியில் கைதிகளின் மனநிலையை எவ்வாறு புரிந்து கொள்வது, கோர்ட்டில் ஆஜர்படுத்தும் முறை, ஜெயிலில் ஏற்படும் பதற்றமான சூழ்நிலைகளை எவ்வாறு கையாளுவது, உடற்பயிற்சி, யோகா உள்ளிட்ட அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
4-வது நாளான இன்று ஜெயில் கைதிகளுக்கு முதலுதவி அளிப்பது குறித்து பயிற்சி நடந்தது.
வேலூர் ஜெயில் மருத்துவ அலுவலர் பிரகாஷ்அய்யப்பன் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஜெயின் அலுவலர்கள் தங்கள் உடல்நிலையை எவ்வாறு பாதுகாத்து கொள்வது, ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு திடீரென காயம், விபத்து ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி என்று பயிற்சி அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக செயல்முறையில் விளக்கி கூறப்பட்டது. முதலுதவி சிகிச்சை பற்றி தெரிந்து வைத்திருந்தால் ஜெயிலில் கைதிகள் உயிரிழப்பதை குறைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
புத்தாக்க பயிற்சி நாளையுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைகிறது.
Related Tags :
Next Story