உப்பளங்களில் மழைநீர் தேங்கியது


உப்பளங்களில் மழைநீர் தேங்கியது
x
தினத்தந்தி 24 Feb 2022 7:04 PM IST (Updated: 24 Feb 2022 7:04 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை திடீரென பலத்த மழை பெய்ததால், உப்பளங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் உப்பளங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
மழை
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் நல்ல வெயில் அடித்து வந்தது. இரவு நேரங்களில் அதிக பனி மூட்டமும் காணப்பட்டது. நேற்று அதிகாலையில் திடீரென பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. தொடர்ந்து காலை 11 மணி வரை அவ்வப்போது சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
தேங்கியது
இந்த மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி கிடந்தது. சமீபத்தில் உப்பளங்களில் உப்பு உற்பத்தி தொடங்கியது. இந்த மழை காரணமாக உப்பளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரன்பட்டினத்தில் 3 சென்டி மீட்டரும், காயல்பட்டினத்தில் 2 சென்டி மீட்டரும், சாத்தான்குளம், திருச்செந்தூரில் ஒரு சென்டி மீட்டர் மழையும் பெய்து உள்ளது.

Next Story