வாலிபரை தாக்கிய 2 பேருக்கு வலைவீச்சு
வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் ஹரிஹரன் (வயது 20). இவர் நேற்று முன்தினம் பேரம்பாக்கம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நரசிங்க புரத்தை சேர்ந்த அபிமன்யு, முகிந்தர் ஆகியோர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன் விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு அவரை தகாத வார்த்தையால் பேசி கையால் தாக்கியுள்ளனர். பின்னர், அவர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியை காட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளனர்.
இது குறித்து அவர் மப்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அபிமன்யு, முகிந்தர் ஆகியோரை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story