ஊட்டி ராஜ்பவனில் இருந்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை திரும்பினார்.


ஊட்டி ராஜ்பவனில் இருந்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை திரும்பினார்.
x
தினத்தந்தி 24 Feb 2022 9:08 PM IST (Updated: 24 Feb 2022 9:08 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி ராஜ்பவனில் இருந்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை திரும்பினார்.

ஊட்டி

ஊட்டி ராஜ்பவனில் இருந்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை திரும்பினார்.

கவர்னர் ஊட்டி வந்தார்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தனது மனைவி லட்சுமி ரவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் கடந்த 17-ந் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனுக்கு வருகை தந்தார். 

அங்கு அவர் ஒரு வாரம் ஊட்டி ராஜ்பவனில் தங்கி இருந்தார். அதில் ஒருநாள் தாவரவியல் பூங்காவை கண்டு ரசித்தபடி நடைபயிற்சி மேற் கொண்டார். கவர்னர் வருகையை ஒட்டி ராஜ்பவன், தாவரவியல் பூங்கா பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

சென்னை திரும்பினார்

இந்த நிலையில் நேற்று கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டி ராஜ்பவனில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார். ராஜ்பவன் வளாகத்தில் அவருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். அதை அவர் ஏற்றுக் கொண்டார். பின்னர் அவரை மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி வழியனுப்பி வைத்தார். 

தொடர்ந்து ஊட்டி ராஜ்பவனில் இருந்து போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் தலைமையில் பாதுகாப்பு வாகனங்கள் கோத்தகிரி, மேட்டுப்பாளை யம் வழியாக கோவைக்கு சென்றது. மேட்டுப்பாளையம் சென்ற கவர்னர் அங்குள்ள வனக்கல்லூரியில்  ஓய்வெடுத்தார். பின்னர் பிற்பகல் 3 மணிக்கு கார் மூலம் கோவை விமான நிலையத்துக்கு சென்ற அவர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை சென்றார். 

போலீசார் பாதுகாப்பு

கவர்னரின் பாதுகாப்பு வாகனங்கள் சென்றதால், ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குறுக்கே வராமல் இருக்க கயிறு கட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

மேலும் வனப்பகுதியை ஒட்டிய ராஜ்பவனுக்குள் வனவிலங்குகள் வராமல் இருக்கவும், அதன் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story