தர்மபுரியில் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு

தர்மபுரியில் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் இறந்தார்.
தர்மபுரியில் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
Published on

தர்மபுரி, மே.18-

தர்மபுரி கந்தசாமி வாத்தியார் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன். தர்மபுரியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் முகேஷ் குமார் (வயது 22). மாற்றுத்திறனாளியான இவர் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி முகேஷ் குமார் உயிரிழந்தார். இதுதொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com