அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
Published on

நெல்லிக்குப்பம்,

கடலூரிலிருந்து நேற்று மாலை அரசு டவுன் பஸ் பயணிகளுடன் பண்ருட்டி நோக்கி புறப்பட்டது. நெல்லிக்குப்பம் அடுத்த கருப்பு கேட் என்ற பேருந்து நிறுத்தத்தில் அந்த பஸ் நிற்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பஸ்சில் பயணம் செய்த வாலிபர் ஒருவர் ஓடும் பஸ்சில் இருந்து இறங்கியதோடு, கீழே கிடந்த கல்லை எடுத்து பஸ் மீது வீசினார்.

இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்து போனது. இதுகுறித்து பஸ் டிரைவர் மாயவேல் கொடுத்த புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து, பஸ் கண்ணாடியை உடைத்த கருப்புகேட் பகுதியை பாரதி(வயது 20) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com