குமாரபாளையம் அருகே 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் ஒருவர் கைது
குமாரபாளையம் அருகே 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல்:
குமாரபாளையம் அருகே 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ரேஷன் அரிசி பறிமுதல்
நாமக்கல் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் அகிலன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சத்தியபிரபு, போலீஸ் ஏட்டு கூத்தகவுண்டன் ஆகியோர் நேற்று ரகசிய தகவலின் பேரில் குமாரபாளையம் அருகே உள்ள வீ.மேட்டூர் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளி அருகில் உள்ள ஏரிக்கரை அருகே வேன் ஒன்று நின்று கொண்டு இருந்தது. அந்த வேனில் இருந்து ரேஷன்அரிசி மூட்டைகளை இறக்கி, ஒருவர் ஏரியின் படிக்கட்டில் வைத்து கொண்டு இருந்தார். இதையடுத்து அவரை பிடித்து குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் விசாரணை செய்தனர்.
கைது
விசாரணையில் அவர் ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குரும்பநாயக்கன்பாளையம் நேதாஜிநகரை சேர்ந்த சக்திவேல் (வயது 34) என்பதும், 102 சாக்கு மூட்டைகளில் 5 டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஆம்னி வேனுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story