உண்டியல் பணத்துக்காக பெண்ணை கொன்ற கும்பல்


உண்டியல் பணத்துக்காக பெண்ணை கொன்ற கும்பல்
x
தினத்தந்தி 24 Feb 2022 11:40 PM IST (Updated: 24 Feb 2022 11:40 PM IST)
t-max-icont-min-icon

உண்டியல் பணத்துக்காக பட்டப்பகலில் வீடு புகுந்து பெண்ணை கொன்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

தொண்டி, 
உண்டியல் பணத்துக்காக பட்டப்பகலில் வீடு புகுந்து பெண்ணை கொன்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
பெண் கொலை
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஆயிரவேலி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயமங்கலம். இவருடைய மனைவி பூங்கோதை (வயது 65).  தற்போது வீட்டில் இவரும் இவரது மகன் ஈசுவரனும் வசித்து வந்தனர். ஈசுவரன் சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டிவிட்டு பகல் 3 மணி அளவில் வீட்டிற்கு சாப்பிட சென்றுள்ளார். 
அப்போது கதவை திறந்து பார்த்த போது அவருடைய தாயார் பூங்கோதை கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து கொடுத்த தகவலின் பேரில் திருவாடானை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
பூங்கோதையின் உடலை பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. சம்பவ இடத்தில் இருந்து ஓடிய மோப்பநாய், அந்த கிராமத்தின் அருகில் உள்ள கீழ்பனையூர் அருகில் உள்ள ஊருணி வரை சென்று நின்றுவிட்டது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர்.
உண்டியல் பணம் 
 பூங்கோதையின் வீட்டின் பூஜை அறையில் ஒரு உண்டியல் இருக்கும். அவரது மகன் கடன் பெற்று வாங்கிய ஆட்டோவுக்கு மாதம் தோறும் தவணை செலுத்த அந்த உண்டியலில் பணம் சேர்த்து வந்தனர்.
பூங்கோதையை கொன்ற கும்பல் அந்த உண்டியலை உடைத்து திறந்து பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் வீட்டில் மற்ற அறையில் இருந்த பணம், நகைகள், பூங்கோதை அணிந்து இருந்த கம்மல் போன்றவை அப்படியே இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பூங்கோதையின் தலையில் இரும்பு கம்பி போன்ற ஆயுதத்தால் மூன்று இடங்களில் தாக்கியதில் பலமான காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.
விசாரணை
பூங்கோதையின் 2 மகள்களுக்கு திருமணம் முடிந்த நிலையில் அவரது மூத்த மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதுதொடர்பாக அவருடைய மற்றொரு மகன் ஈசுவரன் போலீசாரிடம் கூறிய போது, அந்த உண்டியலில் ரூ.10 ஆயிரம் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
இவர்களது வீடு தனியாக இருந்ததால் மர்ம நபர்கள் பட்டப்பகலில் வீடு புகுந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். 
இதுகுறித்து திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி, கொள்ளையர்களை தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 More update

Next Story