ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Feb 2022 11:52 PM IST (Updated: 24 Feb 2022 11:52 PM IST)
t-max-icont-min-icon

ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் மீது திணிக்கப்படும் பணி நெருக்கடிகளை கைவிடக்கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நல்லமுத்து தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் தியாகராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் பொன் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயலாளர் சவுந்திரபாண்டியன், மாவட்ட செயலாளர் ஆதி.ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் போதிய ஊழியர் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் வட்ட தலைவர் ரஜினி, வட்ட செயலாளர் கலையழகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.

Next Story