ஜவுளி ஏற்றுமதி ரூ7½ லட்சம் கோடியாக உயரும்
அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் ஜவுளி ஏற்றுமதி ரூ.7½ லட்சம் கோடியாக உயரும் என்று மத்திய ஜவுளித்துறை மந்திரி உபேந்திர பிரசாத் சிங் கூறினார்.
திருப்பூர்
அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் ஜவுளி ஏற்றுமதி ரூ.7½ லட்சம் கோடியாக உயரும் என்று மத்திய ஜவுளித்துறை மந்திரி உபேந்திர பிரசாத் சிங் கூறினார்.
ரூ.7½ லட்சம் கோடியை எட்டும்
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தில் (ஏ.இ.பி.சி.) இந்தியா முழுவதும் உள்ள ஆடை ஏற்றுமதியாளர்கள் உறுப்பினராக உள்ளனர். ஏ.இ.பி.சி. 44-வது ஆண்டு நிறுவன தின நாள் நிகழ்ச்சி காணொலி மூலமாக நடைபெற்றது.
இதில் மத்திய ஜவுளித்துறை மந்திரி உபேந்திர பிரசாத் சிங் பேசியதாவது:-
வேலைவாய்ப்பு வழங்குவதில் ஆயத்த ஆடை உற்பத்தி துறை முக்கிய பங்கு வகிக்கிறது. உற்பத்தி சார்ந்த ஊக்கச்சலுகை திட்டத்தை பயன்படுத்தி நாட்டின் ஆயத்த ஆடை உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா, ஜவுளி மண்டல திட்டங்களை (பி.எம். மித்ரா) வெற்றி அடைய செய்ய மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஜவுளித்துறைக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. தற்போது ரூ.3 லட்சம் கோடியாக உள்ள நாட்டின் ஒட்டுமொத்த ஜவுளி ஏற்றுமதி அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.7½ லட்சம் கோடியாக உயரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வரியில்லா வர்த்தக ஒப்பந்தம்
ஏ.இ.பி.சி. தலைவர் நரேந்திர குமார் கோயங்கா பேசும்போது, ‘மத்திய அரசு பல்வேறு நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஏற்றுமதியாளர்கள் புதுமையான ஆடை ரகங்களை தயாரிக்க வேண்டும். சிறந்த பிராண்டுகளை உருவாக்கி ஆடைகளை சந்தைப்படுத்த வேண்டும்’ என்றார். ஏ.இ.பி.சி. துணை தலைவர் சுதிர்சேர்ரி, முன்னாள் தலைவர் பிரேம் உதானி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story