லாரியில் மோட்டார் சைக்கிள் மோதி ஆயுதப்படை போலீஸ்காரர் பலி
லாரியில் மோட்டார் சைக்கிள் மோதி ஆயுதப்படை போலீஸ்காரர் பலியானார்.
திருப்புவனம்,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டி (வயது34). இவர் சிவகங்கை ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் சிவகங்கையில் இருந்து மதுரை நோக்கி வந்துள்ளார். அரசனூர் சமத்துவபுரம் அருகே வந்தபோது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த லாரியின் பின்னால் மோட்டார் சைக்கிள் மோதியதில் அலெக்ஸ்பாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரிதாபாலு, லாரி டிரைவர் ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
Related Tags :
Next Story