நூதன முறையில் மூதாட்டியிடம் நகை திருட்டு


நூதன முறையில் மூதாட்டியிடம் நகை திருட்டு
x
தினத்தந்தி 25 Feb 2022 12:46 AM IST (Updated: 25 Feb 2022 12:46 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே நூதன முறையில் மூதாட்டியிடம் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சீர்காழி:
சீர்காழி அருகே நூதன முறையில் மூதாட்டியிடம் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அரியர் பணம் வந்துள்ளது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட நல்லான்சாவடி கிராமம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கலியபெருமாள். ஓய்வு பெற்ற வேளாண்துறை அதிகாரியான இவர் இறந்து விட்டார். இதனால் இவருடைய மனைவி வேதவல்லி (வயது 68). தனது மாமியார் விருதாம்பாளுடன் (90) தனியாக வசித்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று மதியம் வேதவல்லி வீட்டிற்கு டிப்டாப்பான 4 மர்ம நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் வேதவல்லியிடம் உங்கள் கணவருக்கு அரியர் பணம் வந்துள்ளது. அதற்காக அதிகாரிகள் உங்களை நேரில் விசாரித்து போட்டோ எடுத்து வர சொன்னார்கள். எனவே போட்டோ எடுக்கும் போது நீங்கள் நகை அணிந்து இருந்தால் அரியர் பணம் கிடைக்காது. 
நூதன முறையில் நகை திருட்டு
எனவே போட்டோ எடுக்கும் வரை நீங்கள் அணிந்து இருக்கும் நகைகளை கழற்றி வைத்து விட்டு போட்டு எடுத்து கொள்ளுங்கள் என்றனர். அதனை நம்பிய வேதவல்லி காதில் அணிந்து இருந்த 1 பவுன் தோட்டை கழற்றி கீழே வைத்து விட்டார். இதையடுத்து வேதவல்லியை மர்ம நபர் ஒருவர் போட்டோ எடுத்துள்ளார். பின்னர் அந்த நகையை மூதாட்டிக்கு தெரியாமல் எடுத்து கொண்டு 4 மர்ம நபர்களும் மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இதையடுத்து வேதவல்லி தான் கழற்றி வைத்த தோட்டை பார்த்த போது அவற்றை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அந்த மர்ம நபர்களை வீட்டிற்கு வெளியே வந்து பார்த்த போது, அவர்கள் தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து மூதாட்டி வேதவல்லி, வைத்தீஸ்வரன் கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காயத்ரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


Next Story