உளுந்து சாகுபடி வயல்களில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு
கும்பகோணத்தில் உளுந்து சாகுபடி வயல்களில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.
கும்பகோணம்:-
கும்பகோணத்தில் உளுந்து சாகுபடி வயல்களில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.
உளுந்து சாகுபடி
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சம்பா நெல் அறுவடை முடிந்துள்ளது. ஏராளமான விவசாயிகள் தற்போது உளுந்து பயிர் சாகுபடி செய்துள்ளனர். 90 நாள் பயிரான உளுந்து விதை தெளிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது பயிர்கள் வளர்ந்து வருகின்றன. பயிரின் வளர்ச்சிக்கு தேவையான இடுபொருட்களை கொண்டு விவசாயிகள் உளுந்து பயிரை முறையாக பராமரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து பயிர்களை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கும்பகோணம் அருகே உள்ள பழவாத்தான்கட்டளை பகுதியில் உள்ள ஒரு உளுந்து வயலில் இறங்கி சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து பயிர்களை பார்வையிட்டு பயிர்களின் வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு தேவையான உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் எளிதில் கிடைக்கிறதா? என்பது குறித்தும் சாகுபடியில் உள்ள நிறை குறைகள் குறித்தும் அங்கு இருந்த விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.
வேளாண் அலுவலர்கள்
ஆய்வின்போது தஞ்சை வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின், கோட்டாட்சியர் லதா, தாசில்தார் தங்க பிரபாகரன், வேளாண் உதவி இயக்குனர் விஜயலட்சுமி, வேளாண் அலுவலர் தேவி கலாவதி, துணை அலுவலர் சாரதி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜன், வருவாய் ஆய்வாளர் சந்திரசேகரன், வேளாண் உதவி அலுவலர்கள் கலைவாணன், கீர்த்திகா ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story