சேலம் மாவட்டத்தில் புதிதாக 17 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சேலம்
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 21 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று புதிதாக 17 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் 5 பேர், நங்கவள்ளி, சங்ககிரி, வீரபாண்டி, காடையாம்பட்டி, எடப்பாடி, ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம், சேலம் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, சேலம் மாவட்டத்துக்கு நாமக்கல் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்த தலா 2 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 234 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 98 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலும் மாவட்டத்தில் 407 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Related Tags :
Next Story