நலத்திட்ட உதவிகளை தாமதமின்றி மக்களுக்கு வழங்க வேண்டும்;சிறுபான்மை நலத்துறை அதிகாரி சுரேஷ்குமார் அறிவுறுத்தல்
நலத்திட்ட உதவிகளை தாமதமின்றி மக்களுக்கு வழங்க வேண்டும் என ஆய்வுக் கூட்டத்தில் மாநில சிறுபான்மை நலத்துறை இயக்குனர் சுரேஷ்குமார் கூறினார்.
நாகர்கோவில்,
நலத்திட்ட உதவிகளை தாமதமின்றி மக்களுக்கு வழங்க வேண்டும் என ஆய்வுக் கூட்டத்தில் மாநில சிறுபான்மை நலத்துறை இயக்குனர் சுரேஷ்குமார் கூறினார்.
கலந்தாய்வு கூட்டம்
குமரி மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கத்தில் நடைபெற்றது.
தமிழக அரசின் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் அரவிந்த் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், உலமாக்கள் மற்றும் பணியாளர் நலவாரிய சார்பில் நலத்திட்டங்கள், சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை திட்டம், மாவட்ட கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் நிர்வாக குழு உறுப்பினர்கள், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்க நலத்திட்ட உதவிகள் குறித்த தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டது.
காலதாமதமின்றி...
மேலும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களும் காலதாமதமின்றி விரைவில் வழங்கிட துறைசார்ந்த அலுவலர்களுக்கு நலத்துறை இயக்குனர் சுரேஷ்குமார் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், மகளிர் திட்ட இயக்குனர் மைக்கேல் அந்தோணி பெர்ணான்டோ, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி புகழேந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆய்வு
முன்னதாக நாகர்கோவில் நெசவாளர் காலணியில் உள்ள அங்கன்வடி கட்டித்தை சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் சுரேஷ்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதனைதொடர்ந்து நாகர்கோவில் மற்றும் மணவாளக்குறிச்சி பகுதிகளில் உள்ள டாம்கோ கடன் வசதி பெற்ற பயணாளி கடைகளை ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story