மேட்டூர் அணை நீர்மட்டம் 107.06 அடியாக குறைந்தது


மேட்டூர் அணை நீர்மட்டம் 107.06 அடியாக குறைந்தது
x
தினத்தந்தி 25 Feb 2022 2:25 AM IST (Updated: 25 Feb 2022 2:25 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணை நீர்மட்டம் 107.06 அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர்
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது கடந்த மாதம் 28-ந் தேதி மாலையில் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 1-ந் தேதி முதல் காவிரி டெல்டா மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 500 கனஅடிக்கும் கீழே குறைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த வாரம் 109 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 107.06 அடியாக குறைந்தது. அணைக்கு வினாடிக்கு 368 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

Next Story