நாங்குநேரி :வீட்டில் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து
வீட்டில் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது
நாங்குநேரி :
நாங்குநேரி அருகே ஏமன்குளத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 44). இவரது மனைவி கவுரி (40). 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். செல்வகுமார் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு கவுரி குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சமையல் அறையில் பயங்கர வெடிச்சத்தத்துடன் பொருட்கள் தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து நாங்குநேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். விசாரணையில், சமையல் அறையில் இருந்த பிரிட்ஜ் மின்கசிவால் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. கியாஸ் அடுப்பு, கிரைண்டர், மிக்ஸி மற்றும் சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. மேலும் கதவு ஜன்னல் ஆகியவையும் சேதமடைந்தன. இதுகுறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story