ராஜாக்கமங்கலம் அருகே நர்சு தூக்குப்போட்டு தற்கொலை
ராஜாக்கமங்கலம் அருகே நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராஜாக்கமங்கலம்,
ராஜாக்கமங்கலம் அருேக நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
ராஜாக்கமங்கலம் அருகே சூரப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் வைகுண்டமணி. கொத்தனாரான இவருக்கு 2 மகள்கள், 1 மகன் இருந்தனர். மூத்த மகள் அபிநயா (வயது 24), சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார்.
இந்தநிலையில் சொந்த ஊரில் தங்கி வந்த அவர் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ராஜாக்கமங்கலம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். உயர் படிப்பு படிக்க முடியாத வேதனையில் அபிநயா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story