நெல்லை டவுனில் 6 கடைகளுக்கு `சீல்' அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை


நெல்லை டவுனில் 6 கடைகளுக்கு `சீல் அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 25 Feb 2022 3:22 AM IST (Updated: 25 Feb 2022 3:22 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை டவுனில் 6 கடைகளை பூட்டி சீல் வைத்தனர்

நெல்லை:
நெல்லை டவுனில் தொண்டர்கள் நயினார் கோவிலுக்கு சொந்தமாக ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கோவில் மற்றும் சில கோவிலுக்கு சொந்தமான பல்வேறு கடைகளை வாடகைக்கு எடுத்திருப்பவர்கள் கடந்த சில ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் உள்ளார்களாம். இதன் மூலம் ரூ.30 லட்சம் வரை இந்து சமய அறநிலையத்துறைக்கு வாடகை பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் கோர்ட்டு மூலம் 1 வாரத்துக்குள் வாடகை பாக்கி செலுத்த வேண்டும் அல்லது கடையை காலி செய்ய வேண்டும் என்று எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் பல்வேறு கடைகளில் வாடகை செலுத்தவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் கோவில் செயல் அலுவலர் மாரியப்பன், இந்து சமய அறநிலையத்துறை தாசில்தார் மோகனா, ஆய்வாளர் தனலெட்சுமி ஆகியோர் தலைமையில் நேற்று வாடகை செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைக்கும் பணி நடைபெற்றது. 6 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். அப்போது சில கடை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு சில கடைக்காரர்கள் 1 நாள் கால அவகாசம் கேட்டு வாடகை செலுத்தி விடுவதாக கூறினார்கள். அவர்களுக்கு நேற்று மட்டும் அவகாசம் வழங்கப்பட்டது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது, அப்போது அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நேற்று சீல் வைக்கப்பட்ட கடைகளில் கீழ ரதவீதியில் உள்ள தி.மு.க. நிர்வாகியின் கடையும் அடங்கும்.

Next Story