தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரெயிலில் அடிபட்டு பலி
வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரெயிலில் அடிபட்டு பலி
ஜோலார்பேட்டை
வாணியம்பாடி நூருல்லாபேட்டை திப்புசுல்தான் தெருவை சேர்ந்தவர் பச்சையப்பன் முதலியார்.
இவரது மனைவி மகாலட்சுமி (வயது 80). இவர் இன்று மதியம் 12 மணியளவில் வாணியம்பாடி ரெயில்வே கேட் அருகே உள்ள நியூடவுன் பகுதியில் வசித்து வரும் உறவினர்களை பார்க்க புறப்பட்டார்.
வாணியம்பாடி ரெயில் நிலையத்தை அடுத்த நியூடவுன் ெரயில்வேகேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டையை நோக்கி சோதனை ஓட்டத்துக்காக சென்ற ரெயில் என்ஜின் மூதாட்டி மகாலட்சுமி மீது மோதியதில் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story