சி.ஐ.டி.யூ. சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சி.ஐ.டி.யூ. சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Feb 2022 8:03 PM IST (Updated: 25 Feb 2022 8:03 PM IST)
t-max-icont-min-icon

சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கக்கோரி திருவாரூரில் சி.ஐ.டி.யூ. சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர்:
சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கக்கோரி திருவாரூரில் சி.ஐ.டி.யூ. சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கூலி உயர்வு வழங்க வேண்டும்
சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும். அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். சுமைப்பணி தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் தனியார்மயமாக்க டெண்டர் கோரிய உத்தரவினை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. சுமைபணி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தது.
ஆர்ப்பாட்டம் 
அதன்படி நேற்று திருவாரூர் விளமல் நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. சுமைபணி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் சுமைப்பணி சம்மேளன மாநில பொதுச்செயலாளர் வெங்கடபதி, சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அனிபா, சுமைப்பணி சங்க மாவட்ட பொருளாளர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 
---


Next Story